Ramashtapadi – Shrirama tubhyam – Bilahari

 

॥ श्रीरामाष्टपदी-प्रारम्भः ॥

श्रीमद्विश्वादिष्ठान-परमहंस-सद्गुरुश्री-रामचन्द्राय नमः

 

स्वाविद्यापद-तत्कार्य-त्रैपद-वैभवम् ।

श्रीरामचन्द्र-साम्राज्यं नौमि सच्चित्-सुखात्मकम्  ॥

नत्वा श्रीमद्देशिकेन्द्रं कैवल्य-पदमिच्छताम् ।

तदाप्तये त्रिपाद्राम-गीतावलिरुदीर्यते ॥

अष्टाविंशाधिक-शत-गीत-रत्नाकरोत्तमे ।

आद्यं त्रयोदश-पदं शिष्टं त्वष्टपदं भवेत् ॥

श्रीराम-शब्द-सम्बुद्ध्या साकमष्ट-विभक्तिकः ।

एकैकस्या विभक्तेस्तद्गीतं षोडशद्योच्यते ॥

पञ्चाशद्वर्ण-सन्मालालङ्कारवर-कन्धर ।
श्रीमत्त्रिपाद्रामचन्द्र नमस्तुभ्यं पुनः पुनः ॥

 

ஆத்மஸ்வரூபத்தை (மறைக்கும்) அவித்யை மற்றும் அதன் செயல்பாடுகளால் ஏற்பட்ட மூன்று பாதங்களைக் (வித்யா, ஆனந்தம் மற்றும் துரீயம்) கொண்ட (ப்ரஹ்மத்தின்) ஸச்சிதானந்த ஸ்வரூபமாக இருக்கும் ஸ்ரீ ராமசந்த்ரனுடைய (மோக்ஷ) ஸாம்ராஜ்யத்தை வணங்குகிறேன்.

 

ஸ்ரீ குருவை வணங்கியபின், முக்தியை விரும்பியோர்க்கு அது கிடைப்பதற்காக த்ரிபாத்ராமனுடைய கீதங்கள் வரிசையாக சொல்லப்படுகின்றன.

 

128 கீதங்கள் கொண்ட கீத ஸமுத்ரத்தில் முதல் (கீதமானது) 13 பதங்கள் (கொண்டதாகவும்) எஞ்சியவை எட்டு பதங்கள் ஆக உள்ளது.

 

ஸ்ரீ ராம என்ற பதத்தை ஸம்போதனத்துடன் (விளி வேற்றுமை உட்பட) சேர்த்து எட்டு விபக்திகள் கொண்டது. ஒவ்வொன்றும் ஒரு விபக்தியில் என கீதம் பதினாறாக முதலில் சொல்லப்பட்டது.

 

51 (அக்ஷரங்கள் அமைந்த) வர்ணமாலா ரூபமாக அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடைய ஸ்ரீ த்ரிபாத் ராமசந்த்ர! உனக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். (வ்யாகரணாதிகளின் அடிப்படையில் தீர்க்க लॄ போன்றவை இல்லையெனில் மந்த்ர சாஸ்த்ர அடிப்படையில் இவைகளைச் சேர்த்தே 51 அக்ஷரங்கள்.)

 

 

प्रथमखण्डः 

श्रीराम तुभ्यम् – गीतम् – बिलहरिरागः  

 

प्रथमखण्डः

 

श्रीराम तुभ्यम् – गीतम् – बिलहरिरागः 

 

पल्लवी 

 

श्रीराम तुभ्यं नमोऽस्तु भो राम ते नाम वाचि ममास्तु ।

तव [द्द]दक्षपादो हृद्यस्तु विदेहकैवल्यभाग्यं ममास्तु ॥ श्री ॥ १

अद्भुतत्वद्भक्तिरस्तु आवयोरन्तरं कदापि मास्तु । 

इन्दिरा मत्कैवल्येऽस्तु ईश्वर त्वद्भक्तिबृन्दक्षेमोऽस्तु ॥ श्री॥ २

उत्कृष्टतत्त्वं ममास्तु ऊर्ध्वादिदिग्व्यापि मज्ज्ञानमस्तु ।

ऋतवाख्यातिस्तवास्तु ॠकारार्थमोहवैरल्यमस्तु ।। श्री ॥३

ऌमायाविद्वेषो मे[मा]स्तु लॄमोहग्रासनिर्मोहचिन्मेऽस्तु ।

एकमेवाद्वैतं मेऽस्तु ऐश्वरदिव्यविज्ञानं ममास्तु ।। श्री ॥ ४

ओङ्कारलक्ष्ये हृन्मेऽस्तु औपाधिकातीतानन्दो ममास्तु।

अंतमविद्यायां मेऽस्तु अःकारमायामृत्युभावमस्तु ॥ श्री॥ ५

कल्याणरामो हृद्यस्तु खलषड्वर्ग निग्रहो ममास्तु ।

गीतावेद्यरतिरस्तु घोरसंसारस्त्वद्भक्तेषु मास्तु ॥ श्री ॥ ६

ङार्णविषशान्तिरस्तु चक्रराजागारतैव ममास्तु ।

छन्दश्शिरो वाचि मेऽस्तु जीवब्रह्मैक्यं निरङ्कुशमस्तु ॥ श्री॥ ७

झषकुलेशकृपा मेऽस्तु ज्ञानविज्ञानसम्यग्ज्ञानं मेऽस्तु ।

टभवरुक्छान्ति मे[र]स्तु ठचन्द्रशीतलं मच्चित्तमस्तु ॥ श्री ॥ ८

डजविषग्रासो मेऽ[मा]स्तु ढलक्ष्यैक्यनित्यसंपन्ममास्तु ।

णलक्ष्याचित्सिद्द्धिरस्तु त्रिपात्तुर्यत्तुर्यचैतन्यं मेऽस्तु ॥ श्री ॥ ९

थधर्मप्रवृत्तिरस्तु दास्यं सीतापतेर्नित्यं ममास्तु।

धीलक्ष्यसंविन्ममास्तु निर्गुणब्रह्मात्मरूपं ममास्तु ॥ श्री॥ १०

परमानन्दो ममास्तु फणीशपर्यङ्कशायिदयास्तु ।

बन्धमोक्षभ्रान्तिर्मास्तु भक्तपटलकटाक्षो ममास्तु ॥ श्री ॥ १९

मायाकार्यावेशो मास्तु योगमुख्यफलचिद्रूपं मेऽस्तु।

रामचन्द्रभक्तिरस्तु लोकदेशिकोपदेशो ममास्तु ॥ श्री॥ १२

विष्णुता सर्वत्र मेऽस्तु शान्ताविद्याद्वयतत्कार्यमस्तु।

षड्गुणैश्वर्र्यं ममास्तु सत्यप्रतिज्ञाबिरुदं तवास्तु ॥ श्री ॥ १३

हृदि त्वद्दक्षपादोऽस्तु ळशक्तिशक्तिदपरचिन्मेऽस्तु ।

क्षीराब्धिशायिभावोऽस्तु श्रीरामचन्द्रेन्द्र कैवल्यं मेऽस्तु ॥१४

 

॥ ॐ  ॥

 

ஸ்ரீராம! உனக்கு நமஸ்காரம்! ஓ ராம! உன் நாமம் என் வாக்கில் இருக்கட்டும்! உன்னுடைய நைபுண்யம் பொருந்திய திருவடிகள் என் இதயத்தில் இருக்கட்டும்! விதேஹ முக்தி என்ற பெரும் பாக்யம் எனக்கு கிட்டட்டும்.  (१)

 

உன்னிடத்தில் அத்புதமான பக்தி தோன்றட்டும். நம்மிடையே இடைவெளி எப்போதும் இல்லாமல் இருக்கட்டும். என்னுடைய முக்தியில் லக்ஷ்மீ (கடாக்ஷம்/அனுக்ரஹம்) இருக்கட்டும்.
ஓ இறைவா! உன்னுடைய பக்தர் கூட்டத்தில் நன்மை இருக்கட்டும். (२)

 

மேலான உனது தத்வம் என்னுடையதாக இருக்கட்டும். மேல் நோக்கிச் செல்வதாக என் ஞானம் இருக்கட்டும். ருதத்தில் (தார்மீகமான உலக நியதி என்று ஸ்தூலமாக பொருள் கொள்ளலாம்) உன்னுடைய பெருமை இருக்கட்டும்.  பாம்பைப் போன்ற மோஹம் குறைவாக இருக்கட்டும். (३)

 

மலை போன்ற மோஹம் விழுங்குகையில் மோஹமற்ற தன்மை உள்ள புத்தி என்னிடம் இருக்கட்டும் இவ்வுலக விஷயமாக மாயையும் த்வேஷமும் என்னிடம் இல்லாமல் போகட்டும். இரண்டற்ற ஒன்றே என்னுள் இருக்கட்டும்! ஈஶ்வரனைப் பற்றிய புனிதமான ஞானம் என்னுடையதாக ஆகட்டும். (४)

 

ப்ரஹ்மவித்யையில் என்னுடைய (மனம்) இருக்கட்டும். மாயையால் ஏற்படும் தோற்றங்களுக்கு அழிவு உண்டாகட்டும். என் ஹ்ருதயம் ஓம்கார லக்ஷ்யத்தில் இருக்கட்டும். உபாதிகளுக்கு அப்பாற்பட்ட ஆனந்தம் என்னுடையதாக இருக்கட்டும். (५)

 

கல்யாணராமன் என் ஹ்ருதயத்தில் இருக்கட்டும்! தீமை செய்யும் (காம க்ரோத லோப மோஹ மத மாத்ஸர்யங்கள் ) என்ற (பகைவர்களான) ஆறினை ஒதுக்குதல் என்னுடையதாக இருக்கட்டும்! கீதத்தை அளிக்கும் ஆசை இருக்கட்டும்! கோரமான சம்சாரம் உன்னுடைய பக்தர்களுள் இல்லாமல் இருக்கட்டும்  (६)

 

உன் சக்ரமெனும் (ராம யந்த்ரம்) தங்குமிடம் மட்டுமே என்னுடையதாகட்டும்.  விஷய ஆசைகள் என்ற கடலின் ஶாந்தம் உண்டாகட்டும். உபநிஷதங்களில் என் வாக்கு லயிக்கட்டும். ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்றென்ற கொள்கையில் தங்கு தடையற்றதாக இருக்கட்டும் (७)

 

(மத்ஸ்யாவதாரம் செய்தவரானதால்) மீன் குலத்தின் அரசரின் க்ருபை என்னிடம் இருக்கட்டும். ஞானம் விஞ்ஞானம் என்ற சரியான ஞானம் என்னுடையதாக ஆகட்டும். ரோகமான சம்சாரத்தின் சாந்தி என்னுடையதாக ஆகட்டும். சந்த்ரமண்டலத்தின் குளுமை என் புத்தியாக இருக்கட்டும் (८)

 

கடலில் உண்டாகும் விஷமிக்க முதலைகள் இல்லாமல் போகட்டும்! பறைசாற்றும் ஒரே நோக்கமாகிய நித்யமான செல்வமான  முக்தி என்னுடையதாக ஆகட்டும்! வித்யையின் நோக்கம் என் சித்தத்தில் கிட்டட்டும். மூன்று பாதங்கள் கொண்ட அந்த சைதன்ய ஸ்வரூபமானது என்னுடையதாக ஆகட்டும் (९)

 

அறிவின் நோக்கமான ஞான ஸ்வரூபமான பேரொளி எனதாகட்டும். காக்கும் தர்மத்தில் ப்ரவ்ருத்தி இருக்கட்டும். சீதையின் தலைவனிடத்தில் அடியவனாக இருக்கும் தன்மை  எப்போதும் என்னுடையதாக ஆகட்டும் (९०)

 

பேரானந்தம் என்னுடையதாக இருக்கட்டும், பாம்பணை மேல் துயில்பவரின் தயை இருக்கட்டும். பிறப்பு இறப்பு என்ற இரு நிலைகளான குழப்பம் இல்லாதிருக்கட்டும். பக்தர் கூட்டத்தின் கடாக்ஷம் எப்போதும் என்னுடையதாக இருக்கட்டும் (९९)

 

மாயையின் செயல்பாடுகளால் உள்ள தாக்குதல் இல்லாதிருக்கட்டும். யோகத்தின் முக்ய பலனான சித்ரூபம் என்னுடையதாக இருக்கட்டும். ராமசந்த்ரனிடத்தில் பக்தி இருக்கட்டும்! உலகில் குருவின் உபதேசம் என்னுடையதாக இருக்கட்டும் (९२)

 

(ஶமம் தமம் உபரதி, திதிக்ஷா, ஶ்ரத்தா, ஸமாதானம்) ஆகிய ஆறு குணங்களெனும் செல்வம் எனதாகட்டும். விஷ்ணுத்தன்மை எங்கும் என்னுடையதாக இருக்கட்டும். ஸத்யத்துக்கு கட்டுப்பட்டவன் என்ற விருது உனதாக இருக்கட்டும். (१३)

 

அனந்த ஶக்தியும் ஶக்தியை அளிக்கும் அந்த பரப்ரஹ்மம் என் சித்தத்தில் ஒளிரட்டும். ஹ்ருதயத்தில் உன்னுடைய ஶக்தி வாய்ந்த திருவடிகள் இருக்கட்டும். ஸ்ரீ ராமசந்த்ரேந்த்ர! முக்தி நிலை என்னுடையதாக இருக்கட்டும்! (१४)

 

        ॐ

*********************

Text and PDF of Ramashtapadi of Shri Upanishad Brahmendra Yogi

Shri Upanishad Brahmendra Yogi whose sanyasa nama was Ramachandrendra was an advaiti who wrote the commentaries on 108 upanishads and several works on vedanta and namasiddhanta. An article on his Ramatarangas and Ashtapadis by Dr. Aravindh Ranganathan can be found here.

We present the sahityam of his Ramashtapadi written as a set of Vibhaktyanta gitas here. The source of this is the handwritten manuscript copies from Adyar library (from Dr.V.Raghavan’s collection) procured for the personal research work of Dr. Aravindh Ranaganthan. A typed version of this with the Tamil translation by Smt. Vidya Jayaraman is provided here to enable people to further sing and popularise these compositions. In addition, each ashtapadi will be rendered as audio in the youtube channel of  The Lost Melodies   as a series of individual posts.

We thank Vidvan Brahmashri Dr. V. Shriramana Sharma for perusing through the contents, and suggesting corrections and clarifications.

Ramashtapadi_of_UpanishadBrahmendrayogi_With_Translation